ராமநாதபுரம் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தபால் நிலையம் முன்பு திமுக மாணவர் அணி சார்பில் மும்மொழி கொள்கைக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். நடைபெற்றது;
ராமநாதபுரத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுகவினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு GET OUT MODI என்ற வாசாகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சம்பத் குமார் தலைமையில், நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ச முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு, தமிழகத்தின் கொள்ளைக்கு எதிராக, மத்திய அரசு மாநிலத்தின் மீது இந்தி திணிப்பை செய்து பழமையான தமிழ் மொழியை அழிக்க முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், GET OUT MODI உள்ளிட்ட கண்டன வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.