ஈரோடு, வீரப்பன் சத்திரம், கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி (46).தொழிலாளி. இவரது மனைவி வனிதா (33). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.வேலுசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஆனால், அதன்பின் மதுவுக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.இதனால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில், நேற்று மது போதையில் வந்த வேலுசாமி, மனைவி, மகளிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்று மின் விசிறியில் தூக்கிட்டு கொண்டார். அதை கண்ட வனிதா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே வேலுசாமி இறந்துவிட்டதாக கூறினார்.இதுகுறித்து, ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.