புஞ்சை புளியம்பட்டி அருகே உண்டியலை உடைத்து பணம் திருட்டு
புஞ்சை புளியம்பட்டி அருகே உண்டியலை உடைத்து பணம் திருட்டு;
புஞ்சை புளியம்பட்டி அருகே உண்டியலை உடைத்து பணம் திருட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வரப்பாளையத்தில் கருப் பண்ணசாமி கோவில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கோவிலில் பக்தர் கள் காணிக்கைசெலுத்துவ தற்காக ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கோவில் நிர்வாகி விமல் என்பவர் கோவிலுக்கு சென்றார்.அப்போதுபூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப் போது உள்ளே வைக்கப் பட்டு இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தையும் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்று உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து விமல் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குபொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் பூட்டை உடைத்து உள்ளே நுழைவதும், பின்னர் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. அதை வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.