குமரி மாவட்டம் கருங்கல் அருகே பால விளையில் பத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. வழக்கம்போல் கோயில் நிர்வாகிகள் நேற்று வந்து பார்த்தபோது இசக்கியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. ஏற்கனவே இந்த கோயில் வளாகத்தில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு முகமூடி அணிந்த திருடன் திருடிய சம்பவம் நடைபெற்றது. மீண்டும் அதே கோயிலில் ஏற்கனவே கை வரிசை காட்டிய திருடன் மீண்டும் கைவரிசை காட்டியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதிகாலை ஒரு மணிக்கு கையில் ஆயுதத்துடன் துணியால் முகத்தை மூடி வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் கோவில் காம்பவுண்ட் சுவர் ஏரி குறித்து உண்டியலை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. கோவில் தலைவர் பிரேம்சிங் கருங்கல் காலத்தில் புகார் அளித்தார்.