திற்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் பணியாளர்கள் மோதல்

6 பேர் காயம்;

Update: 2025-02-26 07:00 GMT
குமரி மாவட்டம் திற்பரப்பிற்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு நேற்று  மாலை 6 மணி அளவில் திற்பரப்பு படகு துறைக்கு சென்றுள்ளனர். அப்போது படகு துறையில் நுழைவு சீட்டு எடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.        இதில் நுழைவு  சீட்டு கவுண்டரில் இருக்கும் பணியாளர்களுக்கும் சுற்றுலா வந்த நெல்லை மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது.        இதில் நெல்லை மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கும் படகு துறை பணியாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் 5 பேர் ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம்  அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். படகுத்துறை பணியாளர்களில் ஒருவர் அருமனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News