ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது
ராமேஸ்வரத்தில் மாசி மகா சிவராத்திரி தோரோட்டம் உள்ளூர் மற்றும் வட மாநில பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர் நாளை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்;
ராமநாதபுரம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி தோராட்டம் இன்று நடைபெற்றது வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியத்திருத்தலம் காசிக்கு நிகரானது இத்திருத்தலத்தில் கடந்த 18ந்தேதி கொடியேற்றத்தடன் மாசி மகா சிவராத்திரி திருவிழா துவங்கியது 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான இன்று மேஷக்கனத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி பர்வதவர்தினி அம்பாள் ரதத்தில் எழுந்தருளினார். பின் உள்ளுர் மற்றும் வெளிமாநில பக்கத்தர்கள் “இராம..இராம” “சிவ சிவ” என பக்தி பரவேசத்துடன் வடம்பிடித்து இழுத்தனர் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் வீதி உலாவந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார் விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மறை நிலா அம்மாவசையை முன்னிட்டு அக்னி தீர்த்தகடலில் சுவாமி அம்பாள் எழுதருளி தீர்த்தவாரி உற்சபம் நடைபெறும். இந்நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள் முன்னோர்களுக்கு எள்ளுபின்னடம் வைத்து தர்பனம் செய்து முன்னோர்களை வழிபாடுவார்கள். இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்கலிருந்தும் வட மாநில பக்தர்களும் பல ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் வர உள்ளனர் இதற்கான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. வெளியூர் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டுயிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இன்று தேரோட்டத்தை ஒட்டி நான்கு ரத வீதிகளில் தேரோட்டத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாத வண்ணம் ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தமூர்த்தி தலைமையில் போலீசார் தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பே அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.