குமரி மாவட்டம் நித்திரவிளை தனிப்பிரிவு போலீசார் நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஞ்சாம்புறம் பகுதி வழியாக ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு ஒரு ஸ்கூட்டர் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இதை அடுத்து ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை உள்ள இரண்டு மூடைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதை அடுத்து ஸ்கூட்டருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அதே பகுதி புது விளாகம் என்ற இடத்தை சேர்ந்த குமார் (42) என்பவரை நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.