மேல்மலையனூரில் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர்
பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை;
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அலுவலகத்தில், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசிப்பெருவிழாவினை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து காவல்துறையினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று (26.02.2025) நடைபெற்றது. உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் இருந்தார்.