ராமநாதபுரம் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொதுபெயர்ப்பு

முதுகுளத்தூரில் புதிய காவல்துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update: 2025-02-27 02:31 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காவல்துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சின்னகண்ணு கடந்த ஜன. 31ஆம் தேதி பணி நிறைவு முடிந்து, ஓய்வு பெற்றார். இதனையடுத்து கடந்த ஒரு மாத காலமாக இப்பதவி காலியாக இருந்தது. இதற்கிடையில் கமுதி காவல்துணைக் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் முதுகுளத்தூர் காவல்துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் பதவியேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், சிறப்பு தனிப்பிரிவு காவலர்கள் புதிய காவல்துணைக் கண்காணிப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்

Similar News