முதலமைச்சர் மீது அவதூறு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார் 

சைபர் கிரைம்;

Update: 2025-02-27 03:21 GMT
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன். இவர்  தனது வாட்ஸ் அப்பில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாகவும் அவர் மீது நடவடி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுநதது.      சமூக வலைத்தளங்களில் அதன் ஸ்க்ரீன்ஷாட்கள் தகவல்கள் பரவியது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கும் பலர் பகிர்ந்தனர். இது தொடர்பாக பள்ளிகள் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.       சென்னையிலிருந்தும் உயர் அதிகாரிகள் விவரங்களை கேட்டிருந்தனர். மேலும் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள குமாரி மாவட்ட எஸ்பி யிடம் புகார் அளித்துள்ளார்.       இந்த ஸ்டேட்டஸ் எந்த நாளில் வைக்கப்பட்டது? வேற அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதா?  என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டறியப்பட வேண்டும் என  புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News