திட்டக்குடி: தெரு முனை பிரச்சார கூட்டத்திற்கு அமைச்சர் அழைப்பு
திட்டக்குடி பகுதியில் தெரு முனை பிரச்சார கூட்டத்திற்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.;
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் இன்று 27-02-2025 நடைபெறுகிறது. இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.