திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இன்று காலை நிலவரப்படி 196.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.