தேசிய தரச் சான்று

அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்;

Update: 2025-02-27 06:20 GMT
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தரமாக செயல்படும் அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு தரா சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்படி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு தர சான்றிதழ் விருது கிடைத்துள்ளது.முன்னதாக ஆந்திரா, தெலுங்கானா மாநில பார்வையாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டனர். புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு பராமரிப்பு, சமையலறை பராமரிப்பு உடற்கூறு ஆய்வரங்கு என 13 பிரிவுகளில் தர பரிசோதனை நடந்தது.இதில் 90 புள்ளிகளை பெற்றதால் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு விருது கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த விழாவில் இதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வழங்க மருத்துவமனை மருத்துவர் ராம்குமார், செவிலியர் குமாரசாமி பெற்றுக் கொண்டனர்.

Similar News