ஆம்பூர் வீராங்குப்பம் பகுதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா

ஆம்பூர் வீராங்குப்பம் பகுதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா;

Update: 2025-02-27 16:07 GMT
ஆம்பூர் வீராங்குப்பம் பகுதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா அங்காளம்மன், சிவசக்தி போன்ற வேடங்கள் அணிந்தும் , அம்மன் அருள் வந்து பரவசத்துடனும் , ஆவேசத்துடனும் நடனமாடிய பெண்கள் அம்மன் கண்ணில் வைக்கப்பட்ட முட்டையை எடுக்க முட்டி மோதிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாசி மாதம் மகா சிவராத்திரி மறுநாள் கொண்டாடப்படும் பண்டிகையான மயான கொள்ளை திருவிழா தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றில் பிரம்மாண்ட முறையில் அம்மன் உருவம் அமைக்கப்பட்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்ற நிலையில் ஆம்பூர் ஏ கஸ்பா, வளையல்கார தெரு சிவன் படை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து பூங்கரகம் மற்றும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தாரை தப்பட்டை கேரளா செண்டை மேளம் பம்பை வாத்தியங்கள் முழங்க முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தேவலாபுரம் பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை மூன்று முறை சுற்றி வந்து பின்னர் அம்மன் கண்ணில் வைக்கப்படும் முட்டை மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் அதனை எடுக்க இளைஞர்கள் பொதுமக்கள் முட்டி மோதலக்குள்ளாகினர் .இதனைத் தொடர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இருந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் இதேபோல் மணியார்குப்பம் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருத்ர பார்வதி மகாகாளி காலராத்திரி திருக்கோயிலில் இருந்து அம்மன் மற்றும் பூங்கரகம் அங்காளம்மன் சிவசக்தி வேடமடைந்தும் அம்மன் அருள் வந்து பெண்கள் பக்தி பரவசத்துடனும், நடனமாடியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வீராங்குப்பம் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News