தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் வங்கியின் வாயிலில் தவறவிட்ட சுமார் பத்து சவரன் தங்க நகையை உரியவரிடம் சேர்த்த கூலித்தொழிலாளி

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் வங்கியின் வாயிலில் தவறவிட்ட சுமார் பத்து சவரன் தங்க நகையை உரியவரிடம் சேர்த்த கூலித்தொழிலாளி;

Update: 2025-02-27 16:15 GMT
திருப்பத்தூர் மாவட்டம் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் வங்கியின் வாயிலில் தவறவிட்ட சுமார் பத்து சவரன் தங்க நகையை உரியவரிடம் சேர்த்த கூலித்தொழிலாளி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் இவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக பண தேவைக்காக திருப்பத்தூர் கனரா வங்கியில் சுமார் பத்து சவரன் எடையுள்ள நகைகளை அடமானம் வைக்க வந்துள்ளார். அப்போது வங்கியில் நகை மதிப்பீட்டாளர் இல்லாத காரணத்தினால் திரும்பி வீட்டிற்கு செல்லும் பொழுது வங்கியின் வாசலில் தன்னுடைய நகையை தெரியாமல் தவற விட்டுள்ளார் அப்போது திருப்பத்தூர் அடுத்த அனேரி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் புதிய வங்கி கணக்கு துவங்க வங்கியின் உள்ளே நுழைந்தபோது கீழே தங்க நகை இருந்ததை கண்டு எடுத்துச் சென்று வங்கி மேலாளரிடம் கொடுத்துவிட்டு நகைக்கு சொந்தமான நபர்களிடம் இதை ஒப்படைக்கும் போது என் கண்முன்னே கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையோடு சென்ற நிலையில்... சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து ஆய்வு செய்ததில் குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பெருமாளை அழைத்து இன்று திருப்பத்தூர் நகர காவல்துறையினரின் முன்னிலையில் நகையை தவற விட்ட பெருமாள் இடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்து சவரன் தங்க நகையை தவற விட்டுவருக்கு எடுத்து கொடுத்த நபரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Similar News