திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் அனிஷ் நெல்லை ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக அனீஸ் கூடங்குளம் பகுதியில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.