குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்பு

அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்பு;

Update: 2025-02-28 04:33 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலநாதா் கோயிலுக்கு குற்றாலம் ஸ்ரீதா், அத்தியூத்து சக்திமுருகேசன், குற்றாலம் ராமலெட்சுமி, நெடுவயல் சுந்தர்ராஜ், மேலகரம் குடியிருப்பு வீரபாண்டியன் ஆகிய 5 போ் அறங்காவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளா் யக்ஞநாராயணன், ஆய்வாளா் சரவணன் ஆகியோா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, திமுக ஒன்றிய செயலா் அழகுசுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சட்டநாதன், வட்டார காங்கிரஸ் தலைவா் குற்றாலம் பெருமாள், நகர தலைவா் மாடசாமி ஜோதிடா், குற்றாலம் வா்த்தக சங்கத் தலைவா் காவையா, செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஜோதிமுருகன், வேல்ராஜ், நாராயணன், பண்டாரசிவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Similar News