முன்னாள் அமைச்சர் பேச்சு
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பெயரை தவிர்த்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இருவர் பெயரை மட்டுமே குறிப்பிட்டு அனைவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்குமாறு அம்மா பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், பேச்சு;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் ஊராட்சியில் இன்று அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு கூட்டணி இல்லாமல் வெற்றி வாகை சூடி வரலாறு படைத்தவன் என தெரிவித்தார். மேலும் 1987 மார்ச் 25ஆம் தேதி கருப்பு தினம் என்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தலைவி தாக்கப்பட்ட போது செங்கோட்டையன் மூக்கை குத்தினார் என தெரிவித்தார்கள், ஆனால் நான் தாக்கவும் இல்லை துடைக்கவும் இல்லை என தெரிவித்த அவர் 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு 15 வாரங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்கள் எனவும் வரும் 15ஆம் தேதி சட்டமன்றத்தில் அதற்கான குரலை நானும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரியும் குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தார். இறுதியாக அவர் பேசுகையில் வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசி தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரைக் குறிப்பிடாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தது மீண்டும் உட்கட்சி பூசல் தொடர்கின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.