ஐந்து பேர் காயம்

ஈரோட்டில் இரவில் பரபரப்பு சம்பவம் சாலையோரம் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது கார் மோதி 5 பேர் காயம் பதபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்;

Update: 2025-02-28 06:00 GMT
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்.இவர் தனது காரில் நேற்று இரவு ஈரோட்டில் இருந்து பெருந்துறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திண்டல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அந்தப் பகுதியில் சாலையோரம் தனியார் உணவகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்,சிறுவர் உட்பட 5 -க்கும் மேற்பட்டவர்கள் மீது கார் மோதியது.இதில் ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த முதியவர் ராஜ்குமார், கவுதமன், திருநாவுக்கரசு ஆகியோர் படுகாயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண், சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவக்குமார் ஓட்டி வந்த காரில் இருந்த பிரேக் சரியாக வேலை செய்யாததால் காரின் வேகத்தை கட்டுபடுத்த மற்றும் திருப்ப முடியாமல் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து பதப்பதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News