வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம் சார்பாக நீதிமன்றம் வாயில் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார்.இதில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.