மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம்
தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த ஏலத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும், அப்படி இல்லை என்றால் வருகின்ற திங்கள் கிழமை பெரம்பலூரில் சங்கத்தின் சார்பாக பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம் என சங்கத்தின் மாநில செயலாளர் அக்ரி.ரகு தெரிவித்தார்;
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் மாநில அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில செயலாளர் அக்ரி. ரகு தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம்,திருவளக்குறிச்சி கிராம பகுதியில் 30 குவாரிகள் உள்ளது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை குவாரிகள் ஏலம் விடாமல் இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கிராம மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தாமல் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றது. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த ஏலத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும், அப்படி இல்லை என்றால் வருகின்ற திங்கள் கிழமை பெரம்பலூரில் சங்கத்தின் சார்பாக பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம் என சங்கத்தின் மாநில செயலாளர் அக்ரி.ரகு தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.