சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை;

Update: 2025-02-28 15:39 GMT
எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. கும்பகோணம் கா்ணக்கொல்லை கீழத்தெருவைச் சோ்ந்தவா் சேசாச்சலம் (63). இவா் கடந்த 2023, மே 14-ஆம் தேதி எட்டு வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்தாா். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சேசாச்சலத்தை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து சேசாச்சலத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து இழப்பீடு தொகையாக ரூ. 6 லட்சம் பெற்றுத் தருமாறு உத்தரவிட்டாா்.

Similar News