நேர்மையாக செயல்பட்டவருக்கு நேரில் பாராட்டு
நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் கீதா;
நெல்லை டவுனை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவர் நேற்று டவுன் பகுதியில் சாலையில் கிடந்த 15000 ரூபாய் பணத்தை எடுத்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து வள்ளி நாயகத்தின் நேர்மையை பாராட்டி நேற்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் கீதா வள்ளிநாயகத்தை நேரில் அழைத்து நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார்.