நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மண்டல கூட்டம் மண்டல தலைவர் பைசல் அகமது தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மகளிர் தின நிகழ்ச்சியை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.