திருவேங்கடத்தில் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது

திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது;

Update: 2025-03-01 14:28 GMT
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா இன்று 1-ம் தேதி தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு திமுக நகரச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் மற்றும் விளையாட்டுப் பொருள்களும் வழங்கி மும்மொழி கொள்கைக்கு எதிராக உறுதிமொழி எடுத்தும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிகள் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சேர்முத்துரை, திமுக கவுன்சிலர் கணேசன், மகேஸ்வரன், கிருஷ்ணசாமி, வார்டு செயலாளர் பாக்யராஜ், கோவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News