அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆண்டிபட்டியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்பு.
ஆர். பி. உதயகுமார் தலைமையில்,தேனி மாவட்ட அதிமுக செயலாளர்கள் முருக்கோடை ராமர் , எஸ்டிகே.ஜக்கையன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகி ராஜன், வரதராஜன் மற்றும் பலர் பங்கேற்பு;
தேனியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆண்டிபட்டியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் உள்ள மதுராபுரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு , மார்ச் 2ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் ,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ,முன்னாள் அமைச்சர்கள் ,எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அதனை முன்னிட்டு ஆண்டிபட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில்,தேனி மாவட்ட அதிமுக செயலாளர்கள் முருக்கோடை ராமர் , எஸ்டிகே.ஜக்கையன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகி ராஜன், வரதராஜன் ,அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஜெயகுமார், பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், பொதுமக்களுக்கு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு இதழ்களை வழங்கி வரவேற்றனர். முன்னதாக வைகை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக சென்று சாலையில் நடந்து செல்வோர், வியாபாரிகள் ,பேருந்தில் பயணம் செய்வோர் ஆகியோரிடம் அழைப்பிதழை ஊர்வலமாக சென்று வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பிகள், எம்எல்ஏக்கள் ,மாநில, மாவட்ட, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.