தென்காசி மாவட்டத்தில் அதிகாலையில் கனமழை

தென்காசி மாவட்டத்தில் அதிகாலையில் கனமழை;

Update: 2025-03-02 01:40 GMT
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஆழ்வார்குறிச்சி. செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியுடன் சாலைகளில் சென்றனர்.

Similar News