சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்

அதிமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்;

Update: 2025-03-02 03:37 GMT
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் விளங்கி வந்த ஜெயலலிதாவின் 77ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆணைக்கிணங்கவும் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமாகியராஜாசகிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ, ஆலோசனையின் படியும், தென்காசி வடக்கு மாவட்ட இலக்கிய அணியின் சார்பாக இலக்கிய அணியின் மாவட்ட செயலாளர் குட்டி மாரியப்பன் தலைமையில், சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் விண்மிண் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளோடு, கேக் வெட்டப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமசாமி (எ) ரவி, மாவட்ட எம்ஜிஆர்இளைஞர் அணி செயலாளர் சந்திரன்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் நிர்மலாதேவி, மாவட்ட இலக்கிய அணிபொருளாளர் இதயத்துல்லா, மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் வீரணாபுரம் மா.கணேசன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர்கள் சிற்பி கண்ணன், அன்னராஜ், மணிகண்டன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குட்டிமாரியப்பன் சிறப்பாக செய்திருந்தார்.

Similar News