தென்காசி சாலையில் தீப்பற்றி எரிந்த கார் பொதுமக்கள் அலறடித்து ஓட்டம்

சாலையில் தீப்பற்றி எரிந்த கார் பொதுமக்கள் அலறடித்து ஓட்டம்;

Update: 2025-03-02 05:36 GMT
கொல்லத்தை சேர்ந்த அப்துல்சலாம் என்பவரது மகன் ஆதில் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ஆடிக் காரில் தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பழைய குற்றாலம் வந்து தங்கிவிட்டு இன்று 2-ம் தேதி காலை கொல்லத்திற்கு செல்லும் போது காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரில் இருந்த இருவரும் காரில் இருந்து இறங்கியதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் தீயணைப்புத் துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News