நெல்லை மாநகர வண்ணாரப்பேட்டை இந்திரா காலனியில் அமைந்துள்ள சாலையில் ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு பெரிய பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது. இந்த சாலையில் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் இந்த பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.