ரயிலில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு போலீசார் விசாரணை
ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை;
சென்னையில் இருந்து கோவை நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை அன்று மதியம் கிளம்பி இரவு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது காவேரி ஆர்.எஸ். என்ற பகுதியில் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த பொழுது அதே ரயிலில் பயணித்த மர்ம நபர் ஒருவர் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர் ஜன்னலோரம் அமர்ந்திருந்தார். திடீரென அவருடைய கழுத்தில் அணிந்து இருந்த சுமார் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.இதுகுறித்து நகையை பறிகொடுத்த பெண்ணின் புகார் அடிப்படையில் இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் ஞாயிறன்று ஆர்.எஸ் பகுதியில் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இன்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் உள்ளூரை சேர்ந்த ஒரு சில நபர்களையும், உள்ளூரில் உள்ள முன்னாள் குற்றவாளிகளையும் பிடித்து இந்த விவகாரத்தில் அவர்களுக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் காவேரி ஆர் எஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது