அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள்

குமாரபாளையத்தில் மாசி மாத திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள்;

Update: 2025-03-02 13:20 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு குமாரபாளையம் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, காளியம்மன் இந்திராணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, 24 மனை மாரியம்மன் கோவிலில் அம்மன் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, எனும் முப்பெரும் தேவியர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, விட்டலபுரி பண்ணாரி அம்மன் கோவிலில் அம்மன் ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தில் அருள்பா லித்தார். குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, வாசுகி நகர் சக்தி மாரியம்மன்  கோவிலில் அம்மன் சந்தனகாப்பு  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, முதலியார் தெரு, பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் பெருமாளுடன் லக்ஷ்மி    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, தேவாங்கர்  மாரியம்மன் கோவிலில் அம்மன் திருசூலம்     சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Similar News