கடலூர்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூர் அமைச்சர் எம்ஆர்கே தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-02 15:10 GMT
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் பி. முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குநர் பி. குமாரவேல்பாண்டியன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் த. ஆபிரகாம், சர்க்கரைத்துறை இயக்குநர் த. அன்பழகன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் வி. கீதாலட்சுமி, தலைமைப் பொறியாளர் (வே. பொ) ஆர். முருகேசன், தலைமை பொறியாளர் (வே. பொ) (ந. ப. தி) சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News