சங்கரன் கோவில் அருகே மின்விளக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

மின்விளக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை;

Update: 2025-03-03 05:39 GMT
தென்காசி மாவட்டம் உட்பட்ட சங்கரன்கோவில் அருகே உமையதலைவன்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட பவானி 2ம் பகுதியில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சாலைகள் பல ஆண்டுகளாக, மண் சாலைகளாகவே உள்ளன. தார்ச்சாலை அமைக்க பஞ்சாயத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் பழுதாகி உள்ளன. எனவே புதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் உட்பட முக்கியமான அடிப்படை வசதிகளை பவானி 2வது வார்டுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News