சங்கரன்கோவிலில் குண்டும், குழியுமாக உள்ள சாலை
குண்டும், குழியுமாக உள்ள சாலை;
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் நகரம் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு அருள்மிகு சங்கர நாராயணசாமி திருக்கோவில், பூக்கடை, பருத்தி,வத்தல் கமிஷன் கடை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஏராளமான அமைந்துள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு வருகை தரும் மாணவ மாணவிகள், வணிக நிறுவனத்துக்கு வரும் பொதுமக்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். சங்கரன்கோவில் மேலரதவீதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் புளியங்குடி, சுரண்டை வாகனங்களில் செல்கின்றனர். இரவு நேரங்களில் மேலரதவீதியில் வரக்கூடிய பொதுமக்கள் குண்டும், குழியுமாக உள்ள பள்ளத்தில் விழுந்து ஏராளமான வர்கள் காயமடைந்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு டிராக்டரில் இருந்து விவசாயி ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் வாகனங்களில் வருபவர்கள் ஒரு வித அச்சத்தோடு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்