கத்தேரி பிரிவில் விபத்து அபாயம் போலீசார் நியமிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் விபத்து அபாயம் உள்ளதால், போலீசார் நியமிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது;

Update: 2025-03-03 14:22 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் விபத்து அபாயம் உள்ளதால், போலீசார் நியமிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் சேலம் கோவை புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்கள் எல்லாம் இரு புறமும் சர்வீஸ் சாலையில்தான் சென்று வருகின்றன. கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கீழ் பகுதியில் சென்று சாலையை கடக்கும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் வரும் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஷேர் ஆட்டோக்கள் எல்லாம் இப்படி தான் சென்று வருகின்றன.  குறுகிய தூரத்தில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இருந்தாலும், ஸ்டேஷன் அருகே நின்று வாகன சோதனை என்ற பெயரில், மெத்தனமாக இருந்து வருகின்றனர். இரு புறமும் இரண்டு போலீசார் கத்தேரி பிரிவு பகுதியில் நிறுத்தி, போக்குவரத்து சீர் செய்து வாகனங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்து, விபத்துக்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News