விவசாய சங்க குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மேற்குஆரணி வேளாண்மை அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
மேற்குஆரணி வேளாண்மை அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றதில் ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடையே குறைகளை கேட்டறிந்தார். மேலும் விவசாயிகளிடையே கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வேளாண் உதவி இயக்குநர் புஷ்பா அனைவரையும் வரவேற்றார். மேலும் ஆரணி வட்டாட்சியர் கௌரி, தோட்டக்கலை துறை அலுவலர் கௌசிகா, ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது விவசாயி மூர்த்தி என்பவர் எழுந்து நாங்கள் கொடுக்கிற மனுக்களுக்கு இதுவரை எவ்வித தீர்வு காணவில்லை. மேலும் ஆரணி காந்திரோடில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல மனுக்களை கொடுத்துள்ளோம். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என கூறி அலுவலகம் முன்பு விவசாயிகள் மூர்த்தி தலைமையில் குணாநிதி, ஆகாரம் குப்பன், கீழ்நகர் மலைக்கொழுந்து பார்த்திபன், மட்டதாரி அறிவுடைநம்பி, வடுகசாத்து தாமோதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும் விவசாயிகள் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், ஆரணி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 3 மாதங்களாக அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கவில்லை என்றும், 10 வருடங்களாக போனஸ் தரவில்லை, மேலும் பால் தரத்திற்கேற்ப பணம் வழங்கக்கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆரணி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.