சேலத்தில் முதல் முறையாக நடந்த

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு;

Update: 2025-03-05 07:43 GMT
டெகாத்தலான், நம்ம ஆபீஸ், ரா டர்ப் இணைந்து கார்ப்பரேட் கிரிக்கெட் லீக் போட்டியை சேலத்தில் முதல் முறையாக நடத்தின. இதில் 32 நிறுவனங்களின் அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் பஜாஜ் நிதி நிறுவன அணியும், கேப் ஜெமினி அணியும் மோதின. இதில் பஜாஜ் நிதி நிறுவன அணி வெற்றி பெற்று 2025-ம் ஆண்டுக்கான கோப்பையை பெற்றது. அதுமட்டும் அல்லாமல் 2, 3-வது இடம் பெற்ற அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த இந்த கிரிக்கெட் லீக் போட்டியானது நட்புறவை மேம்படுத்தியதுடன், எதிர்கால பயணத்துக்கும் ஊக்கவித்தது என்றும், போட்டியை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் லீக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News