சிறப்பு உதவி ஆய்வாளருக்கு குவியும் வாழ்த்து
மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி;
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று ரோந்து பணியில் இருந்த மேலப்பாளையம் குற்ற பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி கேட்பாரற்று கிடந்த பணம் மற்றும் மடிக்கணினியை எடுத்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்த மடிக்கணினியை அதன் உரிமையாளர் பேச்சமுத்துவிடம் இன்று காவல்துறையினர் வழங்கினர். மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி நற்செயலை காவலர்கள் பாராட்டினர்.