அம்மன்  சிறப்பு வழிபாடு குண்டம் இறங்க நேற்று முதல் காத்திருந்த பெண்கள்

குமாரபாளையத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காளியம்மன் கோவிலில் இன்று குண்டம் இறங்க நேற்று முதல் பக்தர்கள் காத்திருந்தனர்.;

Update: 2025-03-05 09:53 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி பிப். 18ல்  பூச்சாட்டுதல் விழா, பிப். 25  மறு பூச்சாட்டு விழா நடந்தது.  பிப். 26ல் கொடியேற்றம், மார்ச் 4ல் தேர்கலசம் வைத்தல், அதே நாள் இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், மார்ச் 5ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச் 6ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச் 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, மார்ச் 8ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மார்ச் 9ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளது.  குமாரபாளையம் நகரில் உள்ள தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24மனை மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன், வாசுகி நகர்  சக்தி மாரியம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களில் பிப். 25  பூச்சாட்டு விழா நடந்தது அனைத்து கோவில்களில் சக்தி அழைப்பு வைபவம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடந்தது. காளியம்மன் கோவிலில் இன்று மகா குண்டம் இறங்குவதற்காக, பக்தர்கள் நேற்று மாலை 02:00 மணி முதல் காத்திருந்தனர்.

Similar News