அடையாளம் தெரியாத வட மாநில இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வடமாநிலர் இளைஞர் சடலமாக மீட்பு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா அல்லது தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிர் இழந்தாரா என போலீசார் விசாரணை...;

Update: 2025-03-05 10:15 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு சாமுண்டூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் விவசாய நிலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருப்பதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் விரைந்து சென்ற வெப்படை போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது சடலம் உயிரிழந்து 5 மணி நேரத்திற்கு மேலாக இருக்கக்கூடும் என்றும் தலையில் பலத்த காயமும் ரத்தம் அதிகம் வெளியேற நிலையிலும் உயிரிழந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தது வட மாநில இளைஞர் என்றும் இவர் கடந்த சில நாட்களாக சங்ககிரி பகுதியில் யாசகம் எடுத்துக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது மேலும் இவர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கும் வந்த பொழுது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் நள்ளிரவு நேரத்தில் மோதி இருக்கக்கூடும் அதனால் பலத்த காயமடைந்த இவர் இந்த விவசாய நிலத்தில் வந்து விழுந்து உயிர் இழந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரிலும் இல்லை யாராவது இவரை கொலை செய்து கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரிலும் வழக்கு பதிவு செய்து வெப்படை பொறுப்பு ஆய்வாளர் திருமதி தீபா மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சாமுண்டூர் பகுதியில் விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்த தகவல் அப்பகுதியில் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Similar News