ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

புதிய திராவிட கழகம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-05 12:25 GMT
புதிய திராவிட கழகம் சார்பில் பள்ளிபாளையம் ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் காடையார் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறுவன தலைவர் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் ராஜ்கவுண்டர் தலைமை வகித்தார்... வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், வருகின்ற டிசம்பர் மாதம் இறுதியில் புதிய திராவிட கழகம் சார்பில் நடைபெற கூடிய மாநாடு குறித்து ஆலோசனை பேசப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய, பேரூராட்சி,கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. நிறைவாக ஒன்றிய கழக செயலாளர் ஜி.பி..கௌதம் நன்றியுரை வழங்கினார்.

Similar News