நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கணவன் மனைவியை தொடர்ந்து மைத்துனரும் கைது.

ஜெயங்கொண்டம் - நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது மற்றொரு நபரை  போலீசார் தேடி வருகின்றனர்*;

Update: 2025-03-05 16:21 GMT
அரியலூர், மார்ச்5- தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரரை சேர்ந்த சிவா  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள கோடாலி பகுதிக்கு வசூல் பணிக்காக சென்று வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் கோடாலி கிராமம் அருகில் உள்ள செங்கால் ஓடை அருகே பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக கடந்த 2ம் தேதி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தா.பழூர் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு ஆய்வு செய்தபோது தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்ட சிவா என்பது தெரிய வந்தது  இதனைத் தொடர்ந்து இக் கொலை வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கடன் கட்டாமல் இருந்த மகேஷ் (35) மற்றும் அவரது மனைவி விமலா (32) ஆகியோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர் மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய மகேஷின் அக்கா மகன்களான  விக்னேஷ் மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர் இந்நிலையில் இன்று ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Similar News