சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதி வளர்த்த கிளி

கிளியை வாங்க சென்ற வார்டரை மீது தாக்குதல்;

Update: 2025-03-06 03:03 GMT
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சீவலப்பேரியன் (வயது 30) என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது அறையில் கிளி ஒன்று வளர்த்து வருவதாக நேற்று சிறை கண்காணிப்பாளர் வினோத்திற்கு தகவல் கிடைத்தது. சிறையில் பறவைகள் வளர்க்க கூடாது என்பதால் அவரிடம் இருந்து கிளியை மீட்டு வெளியே பறக்க விடுங்கள் என்று அதிகாரிகளிடம் கண்காணிப்பாளர் கூறினார். இதையடுத்து சீவலப்பேரியன் அறைக்கு ஜெயிலர் ராஜேந்திரன், வார்டர் மாயவன் ஆகியோர் சென்றனர். அவர்களை பார்த்ததும் கைதி தனது அறையின் கதவை திடீரென அடைத்து கொண்டார். பின்னர் வார்டர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் கதவை திறந்தார். இதையடுத்து கைதியிடம் கிளியை கொடுக்குமாறு அவர்கள் கூறினர். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன் வார்டர் மாயவனின் மார்பில் தாக்கியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கைதியிடம் இருந்து கிளி மீட்கப்பட்டு வெளியே பறக்க விடப்பட்டது. மேலும் கைதி தாக்கியதில் காயமடைந்த மாயவன் சிறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News