குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே வெள்ளாந்தி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (45). கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூடத்தில் ஒப்பந்த முறையில் ரப்பர் பால் வெட்டும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று ரப்பர் கழகத் தோட்டத்தில் உள்ள மரத்தில் ரப்பர் பால் எடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரண்டு கரடிகள் வந்தன. இதனை கண்ட குமார் ரப்பர் மரத்தின் மீது ஏறினார். ஆனால் ஒரு கரடி குமார் மீது பாய்ந்து அவரது வரது காலை கடித்துக் குதறியது. சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து கரடிகளை விரட்டினார். . இதனால் கரடிகள் மறைவிடத்திற்கு சென்று விட்டன. இதில் படுகாயம் அடைந்தவரை சக தொழிலாளர்கள் மீட்டு ரப்பர் கழகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலிரவு சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.