ராமநாதபுரம் புதிய மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது
திருவாடானையில் புதிய மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்;
ராமநாதபுரம் திருவாடானை நகரின் புறநகர் பகுதியில் குட்லக் தனியார் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு இன்று காலை கோலாகலமாக திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், பாராளுமன்ற உறுப்பினர் ஆர் தர்மர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதிகள் பிஜிஎஸ் அழகர்சாமி உள்ளிட்ட முத்து முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி புதிய மருத்துவமனையை திறந்து வைத்தனர். பின்னர், மருத்துவமனையின் உள்ளே சென்று பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு, மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்த திறப்பு விழாவில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய மருத்துவமனை திறக்கப்பட்டதையடுத்து, திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலர் கலந்து கொண்டார்கள்.