கோயமுத்தூரில் நடந்த மாநில அளவிலான பெண்களுக்கான கேலோ இந்தியா உஷூ விளையாட்டு போட்டியில்
2-ம் இடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா;
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிகள் ஹரிணி, நிஷாந்தினி ஆகிய 2 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான கேலோ இந்தியா உஷூ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு 2-ம் இடம் பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். விழாவில், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நடராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் நிர்மல்ராஜ், கவிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், பள்ளி வளர்ச்சி குழுவினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.