வள்ளியூரில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாம்
மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம்;
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலான்டேஸ்வரி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.