அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விலங்கியல் மன்ற விழா
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக விலங்கியல் துறை மன்ற விழா நடந்தது.;
ஆரணி செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக விலங்கியல் துறை மன்ற விழா (07.03.2025) நடந்தது. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ந. கலைவாணி தலைமை தாங்கினார். மாணவி ரா.கெனிஷா வரவேற்றார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ந. புனிதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் சென்னை பல்கலைக்கழக மரபியல் துறைத் தலைவர் மற்றும் அடிப்படை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே.முனிராஜன் விலங்கியலும் வேலைவாய்ப்புகளும் என்னும் தலைப்பில் விலங்கியல் படிப்பின் முக்கியத்துவத்தையும், பல துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை பின்பற்றி மாணவர்கள் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை மாணவ மாணவியர்களிடையே தெளிவாக எடுத்துக் கூறினார். மாணவன் பி. சரத்குமார் நன்றி கூறினார். இவ்விழாவினை மாணவி ம.ஜனனி தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் துறைப் பேராசிரியர்களான பாலசுப்பிரமணியன், தேவிகா, புகழ்வேந்தன் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் ஆதிகேசவன், ராமதாஸ், கவிதா, பாரதி, கமலா, மாதவன் மற்றும் பிற துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினருடன் அவரது ஆசிரியர் சீனிவாசன் மற்றும் அவரது வகுப்பு தோழர்கள் துரைராஜ் மற்றும் முனிசாமி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.