ஆற்காடு:குடிநீர் குழாய் இணைப்பு பணி நகரமன்ற தலைவர் ஆய்வு
குடிநீர் குழாய் இணைப்பு பணி நகரமன்ற தலைவர் ஆய்வு;
ஆற்காடு நகராட்சிக்கு குடிநீர் வழக்கும் வேப்பூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து கஸ்பா மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகரமன்ற தலைவர் தேவிபென்ஸ் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஆடு அறுக்கும் தொட்டி மற்றும் நவீன சுத்திகரிப்புநிலைய பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி இளநிலை பொறியாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.